/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை'
/
'மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை'
'மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை'
'மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை'
ADDED : பிப் 04, 2024 02:23 AM
அன்னூர்:நீலகிரி எம்.பி., தொகுதி அளவில், பா.ஜ., விவசாய அணி மாநாடு கோவை மாவட்டம், அன்னூரில் நேற்று நடந்தது.
கூடலூர், ஊட்டி, குன்னூர், பவானிசாகர், அவிநாசி, மேட்டுப்பாளையம் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ., விவசாய அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். விவசாய அணி மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பா.ஜ., மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் பேசியதாவது :
2019 லோக்சபா தேர்தலில், தமிழகம் ஏமாற்றம் தந்தது. ஆனாலும் பிரதமர் தமிழகத்திற்கு எந்த குறையும் வைக்கவில்லை. தேடித்தேடி தமிழகத்துக்கு வருகிறார். தமிழை உயிர் போல் நேசிக்கிறார்.
எங்கு சென்றாலும் பாரதியாரையும், திருவள்ளுவரையும், கொண்டாடுகிறார். கர்நாடகாவை விட கூடுதலாக தமிழகத்துக்கு, ஸ்மார்ட் சிட்டிகள் ஒதுக்கி உள்ளார்.
குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை விட, கூடுதலாக ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் பேட்டைகள், தமிழகத்தில் அமைக்க ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்துக்களின் 500 ஆண்டுகால கனவான, அயோத்தி ராமர் கோவிலை கட்டி முடித்தவர் பிரதமர் மோடி. ஆனால் தமிழகத்தில் கோவில் வளாகங்களில், அந்நிகழ்ச்சியை நேரலையில் பார்க்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை. சமூகநீதி பேசும் தி.மு.க., இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க., கோவில்களுக்கு எதிரான கட்சி. இந்த முறை நீலகிரியில் தாமரை மலர வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை, மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு, வானதி சீனிவாசன் பேசினார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.