கல்லுாரி ஆசிரியர்களுக்கு தமிழ் மரபு, டெக்னாலஜி பயிற்சி
கல்லுாரி ஆசிரியர்களுக்கு தமிழ் மரபு, டெக்னாலஜி பயிற்சி
UPDATED : அக் 19, 2026 12:26 PM
ADDED : அக் 19, 2026 12:24 PM
கோவை: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவை இணைந்து, ‘தமிழர் மரபும் தொழில்நுட்பமும்’ என்ற தலைப்பில் 5 நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது.
தமிழ்மொழி, தமிழர் மரபு மற்றும் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினர். தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழர் மரபுக்கும், தமிழர் தொழில்நுட்ப அறிவுக்கும் இடையிலான தொடர்புகளை அறிந்துகொள்ளவும், அவற்றைக் கற்பிக்கும் புரிதலை மேம்படுத்தவும், இந்த பயிலரங்கம் முக்கிய தளமாக அமைந்தது.
நிறைவு விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் முதல்வர் பன்சால் ராஜ்குமார், இயக்குனர் மரகதம் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். அனந்த பார்த்திபன் மற்றும் பிரகாஷ் ஒருங்கிணைத்தனர்.
