/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தார் சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம்
/
தார் சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம்
ADDED : ஆக 03, 2025 09:21 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில், 75 லட்ச ரூபாய் செலவில் தார் சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கின.
பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான நிதியில், 3வது வார்டு தென்றல் நகர், 5வது வார்டு கோனியம்மன் கோவில் வீதி எதிர்புறம், 20வது வார்டு டி.ஆர்.பி., நகர், 2வது வீதி, 14 வது வார்டு கிருஷ்ணா நகர், சிறுதுளி அவென்யூ ஆகிய பகுதிகளில் உள்ள பழுதடைந்த தார் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள், 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. பணிகளை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், துணைத் தலைவர் ரதி ராஜேந்தி ரன், நகராட்சி கவுன்சிலர்கள் ரம்யா, மணிமேகலை, சித்ரா, ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.