/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தார் சாலை புதுப்பிக்கும் பணி
/
தார் சாலை புதுப்பிக்கும் பணி
ADDED : பிப் 19, 2026 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
மாநகராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு வி.கே.எல்., நகர் பகுதியில் நகர் புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில், தார் சாலை புதுப்பித்தல் பணி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு, கவுன்சிலர் சித்ரா தங்கவேலு தலைமை வகித்தார். கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பகுதி பொறுப்பாளர் அருள்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

