/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நண்பரை கத்தியால் குத்திய கால் டாக்ஸி டிரைவர் கைது
/
நண்பரை கத்தியால் குத்திய கால் டாக்ஸி டிரைவர் கைது
ADDED : ஜூலை 08, 2025 10:08 PM
கோவை; பீளமேடு பகுதியில் பேசிக்கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்து நண்பரை கத்தியால் குத்திய கால் டாக்ஸி டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி, ஆனைமலையை சேர்ந்தவர் மணியண்ணன், 48 சிட்ரா பகுதியில் தங்கியிருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வாகனத்தை, சிட்ரா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் நிறுத்துவார். அதே இடத்தில், பரமக்குடியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், 44 என்பவரும் கால் டாக்ஸியை நிறுத்துவார்.
ஒரே பகுதியில் இருப்பதால், இருவரும் பல ஆண்டுகளாக, நண்பர்களாக இருந்து வந்தனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் இருவரும், காரை 'பார்க்' செய்து விட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
இருவரும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த போது, சுபாஷ் சந்திர போஸ் திடீரென ஆத்திரமடைந்து மணியண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டினார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரின் வயிற்றுப்பகுதியில் குத்தினார்.
மணியண்ணன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாஷ் சந்திர போஸைகைது செய்து, சிறையில் அடைத்தனர்.

