நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது தங்கை பெயரிலுள்ள, 'மாருதி ஸ்விப்ட்' காரை, 'ரெட் டாக்ஸி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஓட்டி வந்தார். விமான நிலையம் அருகே காலியிடத்தில் காரை நிறுத்தி விட்டு, கிரிக்கெட் விளையாட சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை. பீளமேடு போலீசார் விசாரித்து, காரை திருடிய, சிங்காநல்லுார், காந்தி நகரை சேர்ந்த எடிசன்,21, என்பவரை கைது செய்து, காரை கைப்பற்றினர்.
காரை கடத்த உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

