/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு; தொழிலாளர்கள் மகிழ்ச்சி
/
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு; தொழிலாளர்கள் மகிழ்ச்சி
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு; தொழிலாளர்கள் மகிழ்ச்சி
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு; தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 18, 2025 09:34 PM

வால்பாறை; வால்பாறையில், பருவமழை கைகொடுத்ததால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த மே மாதம் வரை கோடை வெயில் நிலவியதால், தேயிலை செடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் துளிர்விடாமல் இருந்தது. இதனால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, தற்காலிக தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியதோடு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேயிலை தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வால்பாறையில் பருவமழை பெய்யும் நிலையில், வெயிலும் நிலவுவதால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் செப்., மாதம் வரை தேயிலை உற்பத்தி அதிக அளவில் இருக்கும்,' என்றனர்.