/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் கில்லி
/
போத்தனுார் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் கில்லி
போத்தனுார் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் கில்லி
போத்தனுார் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் கில்லி
ADDED : ஜன 22, 2025 12:30 AM
போத்தனூர்; கோவை, எஸ்.என்.எஸ்., குழுமம், கோவை அத்லெடிக் சங்கம் இணைந்து நடத்திய ஜூனியர் தடகள போட்டியில், பிருந்தாவன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி மாணவர்கள், அசத்தல் வெற்றி பெற்றனர்.
நேரு ஸ்டேடியத்தில் நடந்த, ஒன்பதாம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டியில், 54 பள்ளிகளை சேர்ந்த, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், செட்டிபாளையம் பிருந்தாவன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியை சேர்ந்த நிவாஷினி, 50 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், கிரிக்கெட் பந்து எறிதலில் இரண்டாமிடமும் பிடித்தார்.
நீளம் தாண்டுதலில் மைத்ரா முதலிடமும், தனேஸ்வா கிரிக்கெட் பந்து எறிதலில் முதலிடமும், சஷ்வந்த் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பிடித்தனர்.
ஆதர்ஷ் கிரிக்கெட் பந்து எறிதலில் இரண்டு, 50 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பிடித்தார். வருணிகா , 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், நீளம் தாண்டுதலில் கிருத்திவ் மூன்றாமிடமும் பிடித்தனர்.
ஆறு வயதிற்குட்பட்டோர் பிரிவில், நிவாஷினி சிறந்த வீராங்கனைக்கான கோப்பையை வென்றார். எட்டு வயதிற்குட்பட்ட சிறுமியர் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையையும் இப்பள்ளி வென்றது.
வெற்றி பெற்றவர்களை, பள்ளி தாளாளர் வசந்தராஜன் மற்றும் முதல்வர் யோகாம்பாள் உள்ளிட்டோர்வாழ்த்தினர்.