/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நினைவு சொற்பொழிவில் ஆசிரியர்களுக்கு விருது
/
நினைவு சொற்பொழிவில் ஆசிரியர்களுக்கு விருது
ADDED : மார் 27, 2025 11:35 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், முன்னாள் முதன்மை இயக்குனர் சேட்டு நினைவு சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி செயலாளர் விஜயமோகன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் சேதுபதி, துணைத்தலைவர் வெங்கடேஷ் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக, குருகுலம் பன்னாட்டு கல்வி நிறுவனச் செயலாளர் சுந்தரராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ''ஆசிரியர்களின் சீரிய பணி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை போற்ற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கலங்கரை விளக்காக இருத்தல் வேண்டும். ஆசிரியர்களின் துணை இருந்தால் பத்தாண்டுகளில் இந்தியா சிறந்து விளங்கும்,'' என்றார்.
தொடர்ந்து, தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், பல்வேறு பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட, 56 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் வனிதாமணி நன்றி கூறினார்.

