/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
/
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
ADDED : ஜன 22, 2025 07:51 PM

வால்பாறை; வால்பாறை அரசு பள்ளியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது.
வால்பாறை அரசு மேல்நிலைபள்ளியில் மணிவண்ணன் (தொழிற்கல்வி ஆசிரியர்),  கவுரி (முதுகலை ஆசிரியை), செல்வராஜ் (அலுவலக உதவியாளர்) ஆகியோர் பணி நிறைவு பெறவுள்ள நிலையில், பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
விழாவில், பல்வேறு கால சூழ்நிலைகளில் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த ஏணியாய் நின்று உயர்த்திய ஆசிரியர்களின், கடந்த கால கல்வி சேவை குறித்து, சக ஆசிரியர்கள் நினைவு கூர்ந்தனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரபட்சமின்றி கல்வி கற்பித்த ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். வயது காரணமாக ஆசிரியர் பணியில் ஓய்வு பெற்றாலும், அவர்கள் என்றுமே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான். அவர்களது ஆசிரியர் பணி எப்போதும் போற்றுதலுக்கு உரியது.
பணி நிறைவு பெறும் மூவருக்கும், பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

