/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைமையாசிரியரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
தலைமையாசிரியரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 25, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகம் எதிரே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லோகாம்பாள், பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் விரோத போக்குடன் செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
கூட்டமைப்பு பொதுச்செயலாளர் செல்லதுரை, மாநில துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.