ADDED : ஆக 21, 2026 01:50 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொண்டாமுத்தூர் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது.
டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் அரசு தலைமை வகித்தார். வட்டார செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வில் தேர்ச்சிக்கு 40 மதிப்பெண் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்..
