தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இயற்கை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


UPDATED : நவ 10, 2026 09:38 AM

ADDED : நவ 10, 2026 09:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:38 AM ADDED : நவ 10, 2026 09:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: முன்னோடி இயற்கை விவசாயிகளுக்கு, தோட்டக்கலை தொழில்நுட்பத் துறை சார்பில், வேளாண் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் தோட்டத்தில் நடந்தது.

கோவை வேளாண் பல்கலை தோட்டக்கலைத்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி பேசுகையில், தேங்காய் நாற்றுகள் வளர்ப்பு, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து, விளக்கினார்.

பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி சங்கர் பேசுகையில், அவகோடா பழ மரம் வளர்ப்பு, நாற்றங்கால் அமைத்தல், மறு மதிப்பீடு செய்வது. இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், 300 தொழில்நுட்பங்களை வைத்துள்ளது. அதை உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு, பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளது, என்றார்.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் அறம் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். பயிற்சியில் இயற்கை விவசாயிகள் வேலுசாமி, விஸ்வநாதன், உதயகுமார், வனஜா உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர்.

பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், மாதிரி விதைகள் வழங்கப்பட்டன. சிறு குரு விவசாயிகளுக்கு, தேவையான மதிப்பீட்டு பொருட்கள் தயாரிக்க உபகரணங்கள்,கருவிகளையும் ஏற்பாடு செய்ய, கோவை பியூஸிங் நிறுவனம் உறுதியளித்தது. காலநிலை நிபுணர் சுரேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us