/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில்நுட்ப கண்காட்சி
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில்நுட்ப கண்காட்சி
ADDED : மார் 20, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், 'ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2025' என்ற தலைப்பில், தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சியில், ஆட்டோமொபைல் துறை தலைவர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, 132 படைப்புகளில், சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று இடங்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ்களை ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் வழங்கினார்.