/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் தற்காலிக 'ெஷட்' பணிகள் தீவிரம்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் தற்காலிக 'ெஷட்' பணிகள் தீவிரம்
பழைய பஸ் ஸ்டாண்டில் தற்காலிக 'ெஷட்' பணிகள் தீவிரம்
பழைய பஸ் ஸ்டாண்டில் தற்காலிக 'ெஷட்' பணிகள் தீவிரம்
ADDED : மே 14, 2025 11:36 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பழநி, திருப்பூர் பஸ்கள் நிறுத்தம் அருகே, பயணியர் காத்திருப்பு பகுதியில், தற்காலிக, 'ெஷட்' அமைக்கும் பணி நடக்கிறது.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டுக்கு, கோவை, பழநி, திருப்பூர் மற்றும் புளியம்பட்டி, நெகமம் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இங்குள்ள, பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை மீது மழைநீர் தேங்கி நிற்பதால் சுவர் முழுவதும் ஈரம் ஈர்த்தது. இதனால், கடந்த,2023ம் ஆண்டு ஜூலை மாதம் புளியம்பட்டி பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பகுதியில் மழை நீரால் ஈரம் ஈர்த்த கான்கிரீட் சுவர் பெயர்ந்து, அங்கு காத்திருந்த மாணவி மீது விழுந்தது.
இதையடுத்து, மழை காலங்களில் அங்கு பயணியர் செல்லாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பராமரிப்பில்லாத கட்டடம் இடிக்கப்பட்டது. அதன்பின், புதிய கட்டடம் கட்டப்படும் என பயணியர் எதிர்பார்த்தனர்.
ஓராண்டாக இங்கு கட்டடம் எதுவும் கட்டாததால், பயணியர் சிரமத்துக்குள்ளாயினர். மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் நிற்கும் சூழல் இருந்தது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள சூழலில், பஸ் ஸ்டாண்டில் பயணியர் வசதிக்காக தற்காலிக, 'ெஷட்' அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நகராட்சி வாயிலாக தற்காலிக ெஷட் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தற்காலிக, 'ெஷட்' அமைக்கும் பணி, 11.5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்,'' என்றார்.