தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நான்கு நீதிமன்றங்கள் தற்காலிக இடமாற்றம்

நான்கு நீதிமன்றங்கள் தற்காலிக இடமாற்றம்

நான்கு நீதிமன்றங்கள் தற்காலிக இடமாற்றம்


UPDATED : நவ 16, 2026 06:07 PM

ADDED : நவ 16, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 06:07 PM ADDED : நவ 16, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 160 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் சேதமடைந்துள்ளதால், இங்கு செயல்பட்ட முன்சிப் கோர்ட்களை டாடாபாத், மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கடந்த 2ம் தேதி முதல் தொடர் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்சிப் கோர்ட் அல்லாத மற்ற நான்கு சிறப்பு நீதிமன்றங்களை தற்காலிக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற புறக்கணிப்பு கை விடப்பட்டது. நேற்று முதல் வழக்கம் போல நீதிமன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

அதன்படி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட சி.பி.ஐ., கோர்ட், டான்பிட் கோர்ட், எஸ்.சி– எஸ்.டி., கோார்ட், ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட் ஆகியவை, டாடாபாத்திலுள்ள மாநாகராட்சி வணிக வளாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்நீதிமன்றங்கள் நேற்று முதல் டாடாபாத்தில் செயல்பட துவங்கின. வழக்கு ஆவணங்கள் அங்கு எடுத்து செல்லப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us