ADDED : ஜூன் 02, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வழங்கினார்.
நடப்புக் கல்வியாண்டின் முதல் நாளில், பள்ளிக்கு மாணவ, மாணவியர் வருகை புரிந்தனர். இதையொட்டி, அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வடவள்ளி அடுத்த சுண்டப்பாளையத்தில், கோவை வடக்கு எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் பங்கேற்று, புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கி, மாணவ, மாணவியரை வாழ்த்திப் பேசினார். தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.