/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் நாளை தைப்பூச திருவிழா துவக்கம்
/
மருதமலையில் நாளை தைப்பூச திருவிழா துவக்கம்
ADDED : பிப் 04, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி; முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது.
இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நாளை (பிப்., 5) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
நாளை அதிகாலை, விநாயகர் பூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள், கொடிமரத்தில், சேவற்கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து, தினமும் காலையும் மாலையும், யாகசாலை பூஜையும், திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 10ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி மாலை தைப்பூச தேரோட்டமும் நடக்கிறது.