/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துண்டுக்கருப்பராயர் கோவில் திருவிழா
/
துண்டுக்கருப்பராயர் கோவில் திருவிழா
ADDED : ஜன 29, 2024 11:22 PM

வால்பாறை:வால்பாறை, நடுமலை துண்டுக்கருப்பராய சுவாமி கோவில் திருவிழாவில், நேற்று பொங்கல்பூஜை நெய்வேத்தியம் மற்றும் உச்சகால பூஜை நடந்தது.
வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷனில் உள்ள, துண்டுக்கருப்பராய சுவாமி, மகாமுனீஸ்வரர், உச்சிகாளியம்மன் திருக்கோவிலின், 141ம் ஆண்டு திருவிழா கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நடுமலை தெற்கு பிரிவு கணபதி கோவிலில் பூஜை, நெய்வேத்தியம் நடந்தது. நள்ளிரவு, 1:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய துண்டுக்கருப்பராய சுவாமியை,அதிகாலையில் பக்தர்கள் அழைத்து வந்தனர்.
நேற்று காலை, 9:00 மணிக்கு துண்டுக்கருப்பராயர், மகாமுனீஸ்வரர் சுவாமிக்கு, பொங்கல்பூஜை, நெய்வேத்தியம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சூலுார் மற்றும் கொளப்பலுார் பூசாரிகள் தலைமையில், உச்சிகால பூஜை மற்றும் கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடந்து.
தொடர்ந்து நடந்த அன்னதான விழாவை, வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது, அ.தி.மு.க., நகர செயலாளர் மயில்கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.