/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பள்ளியில் நன்றி நவிலும் நாள் விழா
/
அவினாசிலிங்கம் பள்ளியில் நன்றி நவிலும் நாள் விழா
ADDED : ஜன 08, 2025 11:36 PM

கோவை; அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'நன்றி நவிலும் நாள்' விழா நேற்று நடந்தது.
இதில், மாவட்ட, மாநில அளவிலான கலைத்திருவிழா உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்(கோவை) சதீஸ்குமார் பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ''எதையும் கடமையுடன் செய்தால், வெற்றி கிடைக்கும். கடமைக்காக செய்தால் தோல்விதான் கிடைக்கும். குறையாகவே விமர்சனம் செய்பவர்களை, பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், மாணவியர் தொடர்ந்து முன்னேற வேண்டும்.
எங்கு சென்று வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், பணி என்று எடுத்துக்கொண்டால் வெளிநாடுகளுக்கு செல்லாமல், தாய் நாட்டின் வளர்ச்சிக்காக இங்கேயே பணிபுரிய வேண்டும்,'' என்றார். நிறைவில், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பள்ளி செயலாளர் கவுரி, தலைமையாசிரியை நளினி, தமிழாசிரியை மோகனாம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

