/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வந்து விட்டது 'ஆப்'
/
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வந்து விட்டது 'ஆப்'
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வந்து விட்டது 'ஆப்'
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வந்து விட்டது 'ஆப்'
ADDED : ஆக 06, 2025 10:36 PM
கோவை; மாநகராட்சி பகுதிகளில் ரோடு, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, 24 மணிநேர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட(யு.ஜி.டி.,) பணிகளுக்கு, ரோடுகள் தோண்டப்படுகின்றன.
பணிகளை குறித்த சமயத்தில் முடிக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும், விடுபட்ட பகுதிகளிலும் தற்போது யு.ஜி.டி., பணிகள் நடந்துவருகின்றன.
ஆட்கள் பற்றாக்குறையால், பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக, அதிருப்தி எழுகிறது. குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதில், சில வார்டுகளில் நான்கு பேர் இருக்கவேண்டிய இடத்தில் இருவர் பணிபுரிவதாகவும், பணிகள் தாமதத்தால் ரோடு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்கள் கொந்தளிக்கின்றனர்.
இந்நிலையில், பணிகளில் தொய்வு, அடிப்படை வசதிகள் சார்ந்து பொது மக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை, 'நம்ம கோவை' செயலி வாயிலாகவும், போன் எண்களிலும் தெரிவிக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.