/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தன்னை உணர்ந்தவன் தலைவன்' நுால் வெளியீட்டு விழா
/
'தன்னை உணர்ந்தவன் தலைவன்' நுால் வெளியீட்டு விழா
ADDED : ஜூன் 10, 2025 09:59 PM

கோவை; கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவின், 77வது நுாலான 'தன்னை உணர்ந்தவன் தலைவன்' என்ற நுால் வெளியீட்டு விழா, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் நடந்தது.
மலேசியா மத்திய மேனாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் நுாலை வெளியிட, கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன் பேசுகையில், '''தன்னை உணர்ந்தவன் தலைவன்' என்ற இந்த நுால், வெறும் கவிதையாக மட்டும் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை அளிக்கும் ஒரு புத்தகம். ஒரு கவிதையை படிக்கும் போது, படிக்கும் நபர்களுக்கு ஒரு உணர்ச்சி ஏற்பட வேண்டும். அப்படி, இந்த புத்தகம் இளைஞர்களை வழி நடத்தும் வகையில் அமைந்துள்ளது,'' என்றார்.
மரபின் மைந்தன் முத்தையா தனது ஏற்புரையில், ''இளைஞர்கள் முதல் அனைவருக்கும், ஒரு வழிகாட்டுதலை அளிக்கும் கவிதைகள், இதில் இடம்பெற்றுள்ளன,'' என்றார்.
பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ, நெல்லை லாலா கார்னர் ஸ்வீட்ஸ் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.