/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்க்கெட்டில் வணிகவளாகம் வணிகர் சம்மேளனம் எதிர்ப்பு
/
மார்க்கெட்டில் வணிகவளாகம் வணிகர் சம்மேளனம் எதிர்ப்பு
மார்க்கெட்டில் வணிகவளாகம் வணிகர் சம்மேளனம் எதிர்ப்பு
மார்க்கெட்டில் வணிகவளாகம் வணிகர் சம்மேளனம் எதிர்ப்பு
ADDED : ஏப் 21, 2025 09:38 PM
வால்பாறை,; வால்பாறையில், தமிழக வணிகர் சம்மேளனத்தின் செயற்க்குழு கூட்டம் தலைவர் ரவீந்தரன் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு தலைவர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் பொன்மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் இப்ராஹிம் வரவேற்றார்.
புதுமார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் புதுப்பிக்கும் வகையில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிகவளாகம் கட்ட தமிழக அரசு ஓப்புதல் வழங்கியுள்ளது. புதிதாக வணிக வளாகம் கட்டும்போது, மார்க்கெட் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.