/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வரின் காலை உணவு திட்டம்; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
/
முதல்வரின் காலை உணவு திட்டம்; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
முதல்வரின் காலை உணவு திட்டம்; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
முதல்வரின் காலை உணவு திட்டம்; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
ADDED : செப் 20, 2024 10:19 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே தெற்கு பாளையத்தில் முதல்வரின் காலை உணவு திட்ட உணவு கூடத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா ஆய்வு செய்தார்.
உணவு கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும், வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளுக்கு உணவு விநியோகிக்கும் முறைகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம், கழிப்பறைகள், ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பழைய புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று, அங்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதை பார்வையிட்டார். ஆய்வின் போது, கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் முருகானந்தம், செந்தில், பாலசுப்ரமணியம், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.