/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்டெய்னர் ரேஷன் கடைக்கு கலெக்டர் மனசு வைக்கணும்!
/
கன்டெய்னர் ரேஷன் கடைக்கு கலெக்டர் மனசு வைக்கணும்!
ADDED : ஆக 20, 2025 09:30 PM
வால்பாறை; வால்பாறையில், யானையிடமிருந்து ரேஷன் கடைகளை பாதுகாக்க, எஸ்டேட் பகுதியில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகளும், 42 ரேஷன் கடைகளும் உள்ளன. சமீப காலமாக எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவதால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைகின்றன.
இதனால், பெரும்பாலான எஸ்டேட் பகுதியில், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
தொழிலாளர்கள் கூறுகையில்,'எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ரேஷன் கடைகளில் பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கன்டெய்னர் ரேஷன் கடை அமைத்து, பொருட்கள் வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், கன்டெய்னர் கடைகளாக மாற்றப்படும். முதல் கட்டமாக ஐந்து எஸ்டேட்களில் கன்டெய்னர் கடைகளாக மாற்றப்பட்டுள்ளது,' என்றனர்.