/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியே குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
மாநகராட்சியே குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மாநகராட்சியே குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மாநகராட்சியே குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2024 12:30 AM
கோவை:மாநகராட்சி பகுதிகளில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட குப்பை அகற்றும் பணியை திரும்பப்பெற்று, ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி மாநகராட்சியே மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேயர் கல்பனாவிடம், 41வது வார்டு கவுன்சிலர் சாந்தி அளித்த மனு:
மாநகராட்சிக்கு உட்பட்ட, 100 வார்டுகளிலும் குப்பை அகற்றும் பணியானது கடந்தாண்டு அக்., முதல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டி, வாகனங்கள், இதர உபகரணங்களை பயன்படுத்தி, இப்பணிகள் நடந்துவருகின்றன.
மாநகராட்சி நிர்வாகமானது, செலவுகளை குறைக்கவேகுப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதாக மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தது.
முன்பு நாள்தோறும் வீடுகளுக்கு வந்து குப்பை சேகரித்தது போலவே, தனியாரும் சேகரிப்பர் என, மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வீடுகளுக்கு வந்து குப்பை சேகரிப்பதில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், தனியார் நிறுவனங்கள் முறையாக குப்பை சேகரிப்பதில் சுணக்கம் காட்டிவருகின்றன.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று அபாயமும் உள்ளது.
எனவே, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட, குப்பை சேகரிக்கும் பணியை உடனடியாக திரும்பப்பெற்று, ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி மாநகராட்சி நிர்வாகமே குப்பை சேகரிக்கும் பணியினை, நேரடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மண்டல கூட்டங்களில் குப்பை பிரச்னையை கிளறும் கவுன்சிலர்களும், மாநகராட்சியே மீண்டும் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.