/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏர் ஹாரன் பொருத்திய பஸ்களுக்கு அபராதம் எச்சரிக்கை விடுத்தது போக்குவரத்துதுறை
/
ஏர் ஹாரன் பொருத்திய பஸ்களுக்கு அபராதம் எச்சரிக்கை விடுத்தது போக்குவரத்துதுறை
ஏர் ஹாரன் பொருத்திய பஸ்களுக்கு அபராதம் எச்சரிக்கை விடுத்தது போக்குவரத்துதுறை
ஏர் ஹாரன் பொருத்திய பஸ்களுக்கு அபராதம் எச்சரிக்கை விடுத்தது போக்குவரத்துதுறை
ADDED : ஏப் 17, 2025 11:37 PM

கோவை; zவையில், ஏர் ஹாரன் பொருத்திய பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மண்டலத்தில் டவுன் பஸ்களில் ஏர்ஹாரன்களால் ஒலி மாசு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்று சோதனை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கோவை மண்டலத்திற்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து நேற்று கோவை காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் டெசிபல் மீட்டரை பயன்படுத்தி வாகனங்களில் பொருத்தியிருந்த ஏர்ஹாரன்களை சோதித்தபோது, நுாறு, 150 டெசிபல் அளவுகளில் ஏர்ஹாரன்கள் டவுன்பஸ்களில் பொருத்தியிருப்பது தெரியவந்தது. 90 டெசிபலுக்குள் ஹாரன் சப்தம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதற்கு மேல் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர்.
ஏர்ஹாரன் பொருத்தியிருந்த 21 வாகன டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எல்.இ.டி.,பல்புகளை பயன்படுத்தி பஸ் முழுக்க டிஸ்கோலைட் பொருத்தியிருந்த ஐந்து வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் 90 டெசிபலுக்கும் அதிகமாக சப்தத்தை கொடுக்கும் வகையில் ஆடியோ சிஸ்டம் பயன்படுத்திய ஐந்து பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் அழகரசு கூறியதாவது,'' இது போன்ற ஆய்வுகள் தொடரும்,'' என்றார்.
இந்த ஆய்வில் கோவை மத்தியம் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன், தெற்கு ஆர்.டி.ஓ., மாலதி, மேற்கு பிரதீபா, மோட்டார் வாகனஆய்வாளர்கள் செல்வதீபா, விஜயகுமார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.