/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட தடகள போட்டி வரும், 18ல் நடக்கிறது
/
மாவட்ட தடகள போட்டி வரும், 18ல் நடக்கிறது
ADDED : ஜன 15, 2024 12:29 AM
கோவை;மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப்போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் வரும், 18ம் தேதி நடக்கிறது.
கோவை மாவட்ட தடகள சங்கம், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் லெஜன்ட் சார்பில் 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கான மாவட்ட தடகளப்போட்டி வரும், 18ம் தேதி நடக்கிறது.
இதில் 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 3000மீ., உயரம் தாண்டுதல், நீளம்தாண்டுதல், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ - மாணவியர், குஜராத் மாநிலத்தில் பிப்., மாதம் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர். இதில், பள்ளி மற்றும் கிளப் மாணவர்கள் பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்புவோர், வரும் 17ம் தேதிக்குள் 78716 21952, 94877 12509, 93443 53468 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய, மாவட்ட தடகள சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.