/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருள் வழங்கணும்! மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
/
ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருள் வழங்கணும்! மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருள் வழங்கணும்! மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருள் வழங்கணும்! மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
ADDED : ஜூன் 16, 2025 09:29 PM

பொள்ளாச்சி; 'நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர் பணி நிறைவு பாராட்டு விழா, பொள்ளாச்சி ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர் சங்க கட்டடத்தில் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
மாநில தலைவர் ராஜேந்திரன், மகளிர் மாநில தலைவி வசந்தி, மாநில தகவல் தொடர்பு பிரிவு மைதிலி மற்றும் மகளிர் பிரிவு நிர்வாகிகள் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். ஓய்வு பெற்ற வடக்கிப்பாளையம் ரேஷன் கடை பணியாளர் ராஜேந்திரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிளை தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:
புதிய ஊதிய உயர்வு அரசாணை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். தற்போது, 'ப்ளூடூத்' இணைத்து பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அதனால், நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் கடைகளிலும், கழிப்பறை கட்டித்தர வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களில், கடைகளுக்கு பொதுவினியோக திட்ட பொருட்களை சப்ளை செய்யக்கூடாது. ரேஷன் கடை பணியாளர்களை, ரேஷன் கடை பணிகளை தவிர்த்து, வங்கி பணிகளை செய்ய வலியுறுத்த கூடாது. இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.