/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயியிடம் ரூ. 1.5 கோடி மோசடி: ஒருவர் கைது
/
விவசாயியிடம் ரூ. 1.5 கோடி மோசடி: ஒருவர் கைது
ADDED : அக் 18, 2024 06:18 AM

கோவை : விவசாயியிடம் ஒன்றரை கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கோவை அடுத்த பேரூர் தீத்திபாளையத்தை சேர்ந்தவர் சரவணக்குமார், 42. விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 43. ரியல் எஸ்டேட் அதிபர்.
ஜெயக்குமார் கடந்தாண்டு சரவணக்குமாரிடம் ரியல் எஸ்டேட் துறையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். இதை நம்பி சரவணக்குமார் ரூ.4 கோடியை ஜெயக்குமாரிடம் வழங்கினார். ஆனால், அவர் கூறியப்படி பணத்திற்கு வட்டி எதுவும் தரவில்லை.
சரவணக்குமார் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, ஜெயக்குமார் 2.5 கோடி ரூபாயை திருப்பி அளித்தார். மீதித்தொகை 1.5 கோடியை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து சரவணக்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த விசாரணையின்போது, ஜெயக்குமார் 1.5 கோடி ரூபாய் பணத்தை சரவணக்குமாரிடம் திருப்பி கொடுத்ததாக ஆவணம் ஒன்றை சமர்பித்தார். அந்த ஆவணம் போலி எனத் தெரிந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான ஜெயகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், ஜெயக்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.