/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பயர் பைட்டிங்' முறையில் கொசு ஒழிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரம்
/
'பயர் பைட்டிங்' முறையில் கொசு ஒழிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரம்
'பயர் பைட்டிங்' முறையில் கொசு ஒழிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரம்
'பயர் பைட்டிங்' முறையில் கொசு ஒழிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரம்
ADDED : செப் 27, 2024 11:07 PM
பொள்ளாச்சி: கிராமங்களில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், 'பயர்பைட்டிங்' முறையில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 29 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியம் முழுவதுக்கும், 20 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள், தினமும் மழை நீர் வடிகால்கள், வீடுகள்தோறும் 'அபேட்' மருந்து தெளித்தும், கொசு புகை மருந்தும் அடித்தும் வருகின்றனர்.
கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டாலும், கொசுக்களின் உற்பத்தியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், 'பயர்பைட்டிங்' முறையில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, எவருக்கேனும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்படுகிறது. மேலும், கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து, அதனை அழிக்கும் வகையில், வீரியமிக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களில், தேவையற்ற நிலையில் இருந்த டயர்கள், டியூப்கள் மற்றும் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டு, தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:
கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து அழித்தால், ஓரிரு வாரங்களில் கொசு அடர்த்தியை தடுக்கலாம். டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளையும் தடுக்க முடியும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 'பயர்பைட்டிங்' முறையில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, கிராமங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால், அதற்கேற்ப தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.