/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா துவங்கியது
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா துவங்கியது
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா துவங்கியது
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா துவங்கியது
ADDED : ஜூலை 23, 2025 09:30 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில்.இக்கோவிலில், 32ம் ஆண்டு ஆடி குண்டம் விழா, நேற்று பூச்சாட்டுடன் துவங்கியது. நெல்லித்துறை மக்கள் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள, முத்தமிழ் விநாயகர் கோவிலுக்கு வந்தனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளம் முழங்க, ஊர் பொதுமக்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்பு கோவில் பூசாரி நவீன் குமார் மற்றும் உதவி பூசாரிகள் கையில் கங்கணம் கட்டினர்.
அதன் பிறகு அம்மனுக்கு பூச்சாட்டு நடைபெற்றது. இதில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, ஹிந்து சமய அறநிலைத்துறை மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் கோவில் ஊழியர்கள், நெல்லித்துறை மக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இன்று (24ம் தேதி) ஆடி அமாவாசை பூஜையும், 25ல் லட்சார்ச்சனையும், 26ல் கிராம சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 5ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.