/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை கடக்க 'லிப்ட்' வருது... 'எஸ்கலேட்டர் வருது!' ரூ.20 கோடியில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் புதுசா உருவாகுது

ADDED : பிப் 17, 2025 11:25 PM

கோவை; ரூ.20 கோடியில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை புதுப்பித்துக் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசிடம் கோவை மாநகராட்சி சமர்ப்பித்திருக்கிறது.
கோவையில் ஏழு இடங்களில், பஸ் ஸ்டாண்ட்டுகள் செயல்படுகின்றன. சத்தி ரோட்டில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டை புதுப்பிக்க, உள்ளூர் திட்ட குழும நிதியில் ரூ.10 கோடி கோரப்பட்டிருக்கிறது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டை, உள்ளூர் திட்ட குழும நிதியில் ரூ.30 கோடியில் புதுப்பிக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பகுதியை, முழுமையாக இடித்து விட்டு, நிலத்துக்கு கீழே 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தி, விசாலமாக பஸ்கள் நிறுத்த இடம் ஒதுக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை புதுப்பிக்க, தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது; இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மாநகராட்சி தயாரித்திருக்கிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டுக்கான திட்ட அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் ஸ்டாண்ட் செயல்படும் இடம், உக்கடம் மேம்பாலம் இறங்குமிடத்தில் உள்ள காலியிடம் என, இரு பகுதிகளில் பஸ் ஸ்டாண்ட் செயல்படும்.
ரோட்டை கட்ட, 'எஸ்கலேட்டர்' மற்றும் லிப்ட் வசதியுடன் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். 'மெட்ரோ ரயில்' ஸ்டேஷனுக்கான இடம் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள இடத்தில் கட்டப்படும். 'மெட்ரோ ரயில்' நிறுவனத்திடம் ஆலோசித்து, பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.