/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதன்மை மாநிலமான தமிழகம்: காங். தங்கபாலு பேட்டி
/
முதன்மை மாநிலமான தமிழகம்: காங். தங்கபாலு பேட்டி
ADDED : ஆக 21, 2025 07:04 AM

பொள்ளாச்சி; ''அ.தி.மு.க. ஆட்சியில் பின்தங்கிய தமிழகம், தி.மு.க. ஆட்சியில் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது,'' என, காங். கட்சி சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
பொள்ளாச்சி காங். கட்சி அலுவலகத்துக்கு வந்த தமிழக காங். முன்னாள் தலைவரும், கட்சி சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தங்கபாலு, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் காங். கட்சி சொத்துக்களை பார்வையிட்டு, பராமரிப்பு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் காங். கட்சிக்கு, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது.
இந்தியாவில், பா.ஜ. ஆட்சியில், காங். ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள், தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. பா.ஜ. ஆட்சியில் பொருளாதார மந்தம் நிலவுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில், இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் இருந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், நான்கரை ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாகமாறியுள்ளது.
பல அரசுத்துறைகளும் முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசே அறிவித்துள்ளது. இதுவே, 'இண்டி' கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு, கூறினார்.

