ADDED : நவ 05, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; 'எது உயர்ந்த பக்தி' என்ற தலைப்பில், ஸ்ரீரகுநாத்தாஸ் மஹராஜின் அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை நிகழ்ச்சி, கோவை ராம்நகரில் உள்ள ராம் லட்சுமி ஹாலில் நடந்தது.
இதில் ஸ்ரீரகுநாத்தாஸ் மஹராஜ் பேசியதாவது:
எத்தனையோ ஜன்மங்களாக நாம் செய்த புண்ணிய தவத்தின் பலனாக நம் நாவில் பகவானின் நாமம் வருகிறது. நாம சங்கீர்த்தனம் கேட்கும் பாக்கியம் யாருக்கு கிடைக்கிறதோ, அவர்களிடம் உள்ள சகல பாவங்களும் போய் விடும்.
பகவானை அடைய மற்ற மார்க்கங்களை விட நாமசங்கீர்த்தனம் சிறந்த மார்க்கமாகும். ஹரி நாமம் இந்த பந்தங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் பெற வைக்கிறது. அதனால், ஹரி நாமத்தை தவிர வேறு ஒன்றும் நமக்கு தேவையில்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.

