/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பறவை இருக்கும் கூடு சிறியது அது பறக்கும் வானம் பெரியது'
/
'பறவை இருக்கும் கூடு சிறியது அது பறக்கும் வானம் பெரியது'
'பறவை இருக்கும் கூடு சிறியது அது பறக்கும் வானம் பெரியது'
'பறவை இருக்கும் கூடு சிறியது அது பறக்கும் வானம் பெரியது'
ADDED : நவ 11, 2025 01:05 AM

கோவை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம் தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, காளிநாதன் தலைமை வகித்தார். கவுதமன் எழுதிய, 'ஜே.கே.சார்' கட்டுரை தொகுப்பு, கவிஞர் மைதிலி நிரஞ்சனா எழுதிய 'பெண் ஏந்தும் கடல்' கவதை தொகுப்பு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. கட்டுரை நுால் குறித்து பாரதிசுப்புராயன் கருத்துரை வழங்கினார்.
கவிதை நுால் குறித்து, பேராசிரியர் சுவலட்சுமி பேசுகையில், ''இது, கவிஞர் மைதிலி நிரஞ்சனாவின் முதல் கவிதை தொகுப்பு. கவிதைகளை படிக்கும் போது அப்படி தெரியவில்லை. கவித்துவமான நவீன மொழிநடையில் எழுதி இருக்கிறார். ஏ.ஐ., பற்றி கூட கவிதைகள் உள்ளன. 'பறவை இருக்கும் கூடு சிறியது என்றாலும், அது சிறகு விரித்து பறக்கும் வானம் பெரியது' என்பது போல், இவரது சிறிய கவிதைகள் கூட, பெரிய அர்த்தங்களை தருகின்றன,'' என்றார்.