/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு அணைப்பகுதியில் காட்சிப்பொருளாக மாறிய பூங்கா
/
சோலையாறு அணைப்பகுதியில் காட்சிப்பொருளாக மாறிய பூங்கா
சோலையாறு அணைப்பகுதியில் காட்சிப்பொருளாக மாறிய பூங்கா
சோலையாறு அணைப்பகுதியில் காட்சிப்பொருளாக மாறிய பூங்கா
ADDED : ஜூலை 16, 2025 09:29 PM

வால்பாறை; சோலையாறு அணை பகுதியில், பணி நிறைவடைந்த பின்னரும், பூங்கா பயன்பாட்டிற்கு வராததால், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், சோலையாறு அணையை கண்டு ரசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில் நீர்வளத்துறை சார்பில் அணையை ஒட்டியுள்ள பகுதியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பணி நிறைவடைந்த நிலையிலும், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இதனால், சோலையாறு அணையை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சோலையாறு அணைப்பகுதியில் கடந்த, 2023ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இடையிடையே மழை பெய்ததால், பணி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது, பூங்கா அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், கனமழையின் காரணமாக திறக்கப்படவில்லை. விரைவில் சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கும் வகையில் பூங்கா திறக்கப்படும்,' என்றனர்.