/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகசூல் பாதிப்பால் இளநீர் விலையேற்றம் கோடையில் உச்சம் தொட வாய்ப்பு
/
மகசூல் பாதிப்பால் இளநீர் விலையேற்றம் கோடையில் உச்சம் தொட வாய்ப்பு
மகசூல் பாதிப்பால் இளநீர் விலையேற்றம் கோடையில் உச்சம் தொட வாய்ப்பு
மகசூல் பாதிப்பால் இளநீர் விலையேற்றம் கோடையில் உச்சம் தொட வாய்ப்பு
ADDED : ஜன 27, 2026 03:00 PM
உடுமலை: பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை சுற்றுப்பகுதிகளில் இளநீர் உற்பத்திக்கென பிரத்யேகமாக வீரிய ஒட்டுரக தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
'இப்பகுதிகளில் இருந்து, சராசரியாக நாள்தோறும், ஆறு லட்சம் இளநீர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று வந்தது. தற்போது, மூன்று லட்சம் இளநீர் மட்டுமே பிற பகுதிகளுக்கு செல்கிறது. மேலும், வடகிழக்கு பருவமழை நீண்ட நாட்கள் நீடிப்பு, வழக்கத்தை விட அதிக குளிர் உள்ளிட்ட காரணங்களால், 40 சதவீதம் வரை, இளநீர் மகசூல் பாதித்துள்ளது.
வரும் கோடை காலத்தில் காய்ப்புத்திறன் மேலும் குறையும். கோடை சீசனில் தேவை அதிகரிக்கும் போது, இளநீர் உற்பத்தி குறைவது வர்த்தகத்தில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், வாரந்தோறும் இளநீர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வகையில், 'இவ்வாரத்தில், நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வாரத்தை விட, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 31 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு டன் இளநீர் 12,750 ரூபாயாகும். வரும் வாரங்களில், இளநீர் வரத்து கணிசமாக குறையும்.
சிவப்பு ரக இளநீருக்கு தற்போதே தட்டுப்பாடு நிலவுவதால், அந்த ரக இளநீருக்கு கூடுதல் விலையை விவசாயிகள் கேட்டு பெற வேண்டும்,' என அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய சூழல்களால், வரும் கோடை சீசனில், இளநீர் விலை உச்சத்தை தொடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

