/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'‛ராணி எறும்பின் ரகசிய சமையலறை' குழந்தைகளுக்கான ஒரு அக்கறை
/
'‛ராணி எறும்பின் ரகசிய சமையலறை' குழந்தைகளுக்கான ஒரு அக்கறை
'‛ராணி எறும்பின் ரகசிய சமையலறை' குழந்தைகளுக்கான ஒரு அக்கறை
'‛ராணி எறும்பின் ரகசிய சமையலறை' குழந்தைகளுக்கான ஒரு அக்கறை
ADDED : ஜூலை 13, 2025 12:28 AM

ஒரு சோறு பருக்கை யானைக்கு சிறியது ஆனால்... எறும்புக்கு...!
- இந்த கருத்தை மையமாக வைத்து, குழந்தைகளும் எறும்பும் பேசக் கூடிய வகையில் வந்த ஒரு சிறுகதை, சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவிநாசியை சேர்ந்த எழுத்தாளர் மகேஷ், கோவையில், ஐ.டி.,யில் பணிபுரிகிறார். இவர்தான் இந்த சிறுகதையின் பிரம்மா.
இவரது முதல் படைப்பு, கவிதை தொகுப்பாக, 2019ல் வெளிவந்தது. பின், மற்றொரு கவிதை தொகுப்பு, ஆன்மிக நுால் என, தற்போது 'ராணி எறும்பின் ரகசிய சமையலறை' என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கதை எழுதியுள்ளார்.
கதை இதுதான்...!
இரண்டு குழந்தைகளிடம் எறும்பு பேசுவது மாதிரி கதை நகர்கிறது. இயற்கை உணவு சாப்பிடும் வீட்டுக்கு மட்டும் எறும்பு பயணிக்கிறது. துரித உணவு உட்பட சத்தில்லாமல் சாப்பிடுவோர் வீட்டுக்கு எறும்பு செல்ல மறுக்கிறது. க்ளைமாக்ஸ் சொல்கிறது ஒரு நீதி.
''உடலுக்கு உரம் சேர்ப்பது உணவு தான். தரமான உணவை உண்ண வேண்டும் என்ற நோக்கிலும், குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையிலும், இந்த கதையை எழுதியுள்ளேன்.
குழந்தைகள் பலர், இன்று துரித உணவுகளை உட்கொண்டு வருகின்றனர். பாரம்பரிய உணவை உட்கொள்ள வேண்டும். பெற்றோரும், குழந்தைகளுக்கான உணவு முறையில் அக்கறை செலுத்த வேண்டும்,'' என்கிறார் மகேஷ்.

