/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்ட தகவலும், கடிதமும் கிடைக்கல... தகவல் ஆணையத்தின் செயலால் ஏமாற்றம்
/
கேட்ட தகவலும், கடிதமும் கிடைக்கல... தகவல் ஆணையத்தின் செயலால் ஏமாற்றம்
கேட்ட தகவலும், கடிதமும் கிடைக்கல... தகவல் ஆணையத்தின் செயலால் ஏமாற்றம்
கேட்ட தகவலும், கடிதமும் கிடைக்கல... தகவல் ஆணையத்தின் செயலால் ஏமாற்றம்
ADDED : அக் 27, 2025 10:38 PM
சூலூர்: கேட்ட தகவலும், ஆட்சேபனை தெரிவிக்க அனுப்பிய கடிதமும் கிடைக்காத நிலையில், வழக்கை முற்றாக்கம் செய்த தகவல் ஆணையத்தின் செயல், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூலூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர். இவர், சூலூர் பகுதியில் உள்ள அரசு இடம் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு, சூலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். எந்த பதிலும் கிடைக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.
இதையடுத்து ஆணையத்தில் இருந்து கடந்த, செப்., 25 தேதியிட்ட கடிதம் ஒன்று, செப்., 29ம்தேதி கிருஷ்ணகுமாருக்கு கிடைத்தது. அதில், வழக்கு குறித்து கருத்துகள், ஆட்சேபனைகளை, தெரிவிக்க, கடைசி நாள், ஆக., 26 என, இருந்தது. இதனால், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த அவர், மீண்டும் தகவல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கேட்ட தகவல்கள் குறித்து எந்த பதிலும் கிடைக்காத நிலையில், வழக்கு முற்றாக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தகவல் ஆணையம் அதிகாரிகளுக்கு துணை போகும் செயலில் ஈடுபட்டுள்ளது. ஆக. மாதத்தில் எனக்கு எந்தவித அறிவிப்பு கடிதமும் கிடைக்கவில்லை. கடிதம் அனுப்பாமலேயே குறித்த தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனக்கூறி வழக்கை முற்றாக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த கோரி விண்ணப்பித்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

