/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மைதானத்தை மேம்படுத்தணும்! 'குடி'மகன்களால் தொல்லை
/
பள்ளி மைதானத்தை மேம்படுத்தணும்! 'குடி'மகன்களால் தொல்லை
பள்ளி மைதானத்தை மேம்படுத்தணும்! 'குடி'மகன்களால் தொல்லை
பள்ளி மைதானத்தை மேம்படுத்தணும்! 'குடி'மகன்களால் தொல்லை
ADDED : ஜூலை 15, 2025 08:25 PM
குடிமங்கலம்; அரசுப்பள்ளி மைதானத்தை மேம்படுத்தி, வீரர்களுக்கு பயிற்சி தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், மைதானம், 'குடி'மகன்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. பள்ளியில் இருந்து சற்று தள்ளி, ஒன்றிய அலுவலகத்தின் எதிரில், இம்மைதானம் அமைந்துள்ளது.
நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஊராட்சி, ஒன்றிய மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நுழைவாயில் பகுதியில் மட்டும், சுற்றுச்சுவர் கட்டி மறுபுறம் கட்டவில்லை.
தற்போது இந்த மைதானத்தில், விடுமுறை நாட்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. காலை, மாலை நேரங்களில், மக்கள் நடைபயிற்சி செல்கின்றனர்.
இந்நிலையில், சமீபகாலமாக இந்த மைதானத்தில், இரவு நேரங்களில், நுழையும், 'குடி'மகன்கள், குடித்து விட்டு, காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிச்செல்கின்றனர். பாட்டில்களை உடைத்து வீசுவதும் தொடர்கதையாக உள்ளது.
இதனால், நடைபயிற்சி செல்வோரும், விளையாட்டு வீரர்களும் பாதிக்கப்படுகின்றனர். மைதானத்துக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைத்து, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் பயிற்சி பெறும் வகையில், பயிற்சி தளம் ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
ஆனால், இக்கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

