sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

அழகு

/

 கம்மல் தேர்வில் இருக்குது அழகு ரகசியம்!

/

 கம்மல் தேர்வில் இருக்குது அழகு ரகசியம்!

 கம்மல் தேர்வில் இருக்குது அழகு ரகசியம்!

 கம்மல் தேர்வில் இருக்குது அழகு ரகசியம்!


UPDATED : பிப் 22, 2026 06:42 AM

ADDED : பிப் 22, 2026 06:22 AM

Google News

UPDATED : பிப் 22, 2026 06:42 AM ADDED : பிப் 22, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நா ம் உடுத்தும் ஆடை எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், முகத்தின் வடிவத்திற்கு பொருந்தாத கம்மல்களை அணிந்தால், அது ஒட்டுமொத்த தோற்றத்தையே பொலிவிழக்க செய்துவிடும்.

உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப கம்மல்களை தேர்வு செய்தால் மட்டுமே, அந்த அழகு முழுமையாக வெளிப்படும், என்கிறார் அழகுக்கலை நிபுணர் ரம்யா.

இன்றைய இளைய தலைமுறை, 'மினிமல்' கம்மல்கள் முதல் 'ஸ்டேட்மென்ட்' ரக கம்மல்கள் வரை பலவற்றில் ஆர்வம் காட்டுகிறது. இருப்பினும், பேஷனை மட்டும் பார்க்காமல் உங்கள் முக அமைப்பை கவனிப்பது அவசியம்.



உங்கள் முகத்தின் அகலமானது, கழுத்தின் நீளத்தை விடக் குறைவாக இருந்தால், சிறிய அளவிலான கம்மல்களே (Studs) உங்களுக்கு சரியான தேர்வு.

முகத்தின் அகலத்தை விட, கழுத்தின் நீளம் அதிகமாக தெரிந்தால், நீங்கள் நீளமான 'ஹேங்கிங்' கம்மல்கள் அல்லது பெரிய அளவிலான 'ஸ்டேட்மென்ட்' கம்மல்களை தேர்வு செய்யலாம். இது உங்கள் தோற்றத்தை சமநிலைப்படுத்தி, தனித்துவமாகக் காட்டும். அதேபோல், கழுத்தின் நீளமும் முகத்தின் அகலமும், சமமாக இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உங்களுக்கு சிறிய ஜிமிக்கி முதல் ஜம்போ சைஸ் கம்மல்கள் வரை எது அணிந்தாலும் கச்சிதமாக பொருந்தும்.

பேஷன் என்பது அணிவது மட்டுமல்ல, அது நமக்கு பொருந்துகிறதா என்று பார்த்து அணிவதும்தான்!






      Dinamalar
      Follow us