/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துப்பாக்கி சுடுதல் போட்டியில் வச்ச குறி தப்பவில்லை
/
துப்பாக்கி சுடுதல் போட்டியில் வச்ச குறி தப்பவில்லை
துப்பாக்கி சுடுதல் போட்டியில் வச்ச குறி தப்பவில்லை
துப்பாக்கி சுடுதல் போட்டியில் வச்ச குறி தப்பவில்லை
ADDED : ஏப் 15, 2025 11:32 PM

கோவை; கோவை மாநகர போலீசாருக்காக, துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை ரைபிள் கிளப்பில் நேற்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் பிரிவு ஆரம்பித்து 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஏப்., 13ம் தேதி முதல் பவள விழா கொண்டாட்டமாக போலீஸ், போலீசாரின் குடும்பத்தினர், பொது மக்களுக்கு, விழிப்புணர்வு வாக்கத்தான், கலை நிகழ்ச்சிகள், நடத்த திட்டமிடப்பட்டது.
கடந்த 14ம் தேதி துவங்கி, இம்மாத கடைசி வரை போலீசார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
போலீசாரின் குழந்தைகளுக்கு ஓவியம், பேச்சுப்போட்டி, போலீஸ் - பொது மக்கள் இணைந்து கிரிக்கெட் போட்டி, சைக்கிளிங், போலீசாருக்கு மருத்துவ முகாம் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகளுக்கு (எஸ்.ஐ.,க்கள் முதல் கமிஷனர் வரை) துப்பாக்கி சுடுதல் போட்டி, கோவை பி.ஆர்.எஸ்., வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் நேற்று துவங்கியது. குறி தவறாமல் சுட்ட போலீசார், பாராட்டு பெற்றனர்.
போலீசாருக்கு, '30 யார்ட்ஸ் பிஸ்டல்' சுடுதல் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கோவை மாநகர கமிஷனர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

