/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென் மாநில தென்னை திருவிழா வரும் 28ல் பல்லடத்தில் நடக்கிறது
/
தென் மாநில தென்னை திருவிழா வரும் 28ல் பல்லடத்தில் நடக்கிறது
தென் மாநில தென்னை திருவிழா வரும் 28ல் பல்லடத்தில் நடக்கிறது
தென் மாநில தென்னை திருவிழா வரும் 28ல் பல்லடத்தில் நடக்கிறது
ADDED : ஜன 25, 2024 09:39 PM
கோவை:ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில், தென் மாநில தென்னை திருவிழா வரும், 28ம் தேதி பல்லடத்தில் நடக்கிறது.
இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:
தென்னை பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை வகித்தாலும், விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை.
எனவே, தென்னையுடன் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்டவற்றை ஊடுபயிராக வளர்ப்பதால், பல மடங்கு வருவாய் ஈட்ட முடியும்.அந்த வகையில் கடந்த, 15 ஆண்டுகளில், 20,000 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளித்து உள்ளோம்.
தொடர்ந்து, தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் விதமாக வரும், 28ம் தேதி, 2,000 விவசாயிகள் வரை கலந்துகொள்ளும், தென் மாநில தென்னை திருவிழாவை நடத்த உள்ளோம்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள விக்னேஷ் மஹாலில் காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் விழாவில், கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநில முன்னோடி விவசாயிகள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
விஞ்ஞானிகளும் பங்கேற்று பயிர்களை மதிப்பு கூட்டுவது, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து எடுத்துரைக்கின்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பாரம்பரிய காய்கறி, பயிர் வகைகளுடன், 60 இயற்கை அங்காடிகள் இடம்பெறுகின்றன.
83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

