/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களின் ஆதரவு பா.ஜ.,வின் பக்கமே! மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் நம்பிக்கை பேச்சு
/
பெண்களின் ஆதரவு பா.ஜ.,வின் பக்கமே! மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் நம்பிக்கை பேச்சு
பெண்களின் ஆதரவு பா.ஜ.,வின் பக்கமே! மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் நம்பிக்கை பேச்சு
பெண்களின் ஆதரவு பா.ஜ.,வின் பக்கமே! மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் நம்பிக்கை பேச்சு
ADDED : பிப் 04, 2024 12:07 AM

சூலூர்:கோவை அடுத்த சின்னியம்பாளையத்தில், கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் பேசிய, கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், பெண்களின் முன்னேற்றத்துக்காக பா.ஜ., பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், நாடு முழுவதும் பெண்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
இம்மாநாட்டில், ஹரியானா மாநிலம் சிர்சா தொகுதி எம்.பி., சுனிதா துக்கல் பேசுகையில், பா.ஜ., தான் மகளிருக்காக அனைத்து துறைகளிலும் முன்னுரிமை அளிக்கிறது. தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால், உயர்ந்த நிலையை அடைய முடியும், என்றார்.
தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேசியதாவது:
கடந்த, 15 ஆண்டுகளாக கட்சியில், 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது பா.ஜ., தான். 50 சதவீதம் பெண்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் கட்சி பா.ஜ., தான்.
பெண்களுடைய பங்களிப்பால் தான், நாடு முன்னேற்றமடையும். வறுமை கோட்டில் இருந்து ஒரு குடும்பம் மீள வேண்டும் என்றால், அந்த குடும்பத்தில் உள்ள பெண்களை மீட்க வேண்டும், என, பிரதமர் முடிவு செய்து, பெண்களுக்கான திட்டங்களை அதிகம் அமல்படுத்தினார்.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், உஜ்வாலா திட்டம் என, பல திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு குடியரசு தின விழாவில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சைனிக் பள்ளிகளில் பெண்களும் படிக்க, நடவடிக்கை எடுத்தது பா.ஜ.,தான்.
இதனால், நாடு முழுவதும் பெண்களின் ஆதரவு, தற்போது பா.ஜ., பக்கம் திரும்பியுள்ளது. பெண்களின் பாதுகாவலனாக, பிரதமர் மோடி உள்ளார்.
தேர்தல் களத்தில் பணியாற்ற, நாம் தயாராக வேண்டும். ஒவ்வொரு பூத் வாரியாக களப்பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் நடக்கும் குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை அகற்ற, ஓய்வறியாமல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், துணைத்தலைவர் வத்சலா, கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, கோவை லோக்சபா தொகுதி பொறுப்பாளர் மணி, லோக்சபா அமைப்பாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.