நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை, அட்டகட்டியில், காடம்பாறை மின் உற்பத்தி நிலைய மின் ஊழியரின் மத்திய பேரவைக்கூட்டம், மறைந்த தலைவர்களின் படத்திறப்பு விழா, சங்க கட்டட திறப்பு விழா என முப்பெரும் விழா பேரவை கிளைத்தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடந்தது. செயலாளர் ஸ்ரீநிவாசன், பொருளாளர் தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அட்டகட்டியில் புதுப்பிக்கப்பட்ட சங்க அலுவலகத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில செயலாளர் மணிகண்டன், மண்டல செயலாளர் கோபால கிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராஜேந்திரன், உடுமலை செயலாளர் கோவிந்தன் உட்பட பலர் பேசினர்.