/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொண்டிபாளையம் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்
/
மொண்டிபாளையம் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்
ADDED : பிப் 07, 2025 10:03 PM
அன்னுார்; மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், 58ம் ஆண்டு தேர்த் திருவிழா துவங்கியுள்ளது. கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (8ம் தேதி) காலை 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்பக விமானத்தில், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.
வரும் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு பரிவேட்டையும், வரும் 12ம் தேதி இரவு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது.