/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்த ஒன்றிய அலுவலகம் தி.மு.க., அ.தி.மு.க.,வினர் அடுத்தடுத்து பங்கேற்றதால் பரபரப்பு

ADDED : நவ 13, 2024 06:31 AM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ஒன்றிய அலுவலக கட்டடத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர் அடுத்தடுத்து பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியநாயக்கன்பாளையத்தில் ஒன்றிய அலுவலக கட்டடம், ஒருங்கிணைந்த வருவாய் இனங்கள் திட்டத்தில், 3.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார், கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்தி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.,வினர் புதிய கட்டட வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்பு, அ.தி.மு.க.,வினர் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமையில் ஒன்றிய அலுவலக புதிய கட்டட வளாகத்துக்குள் நுழைந்து, ஒன்றிய குழு தலைவர் அறையில் குத்துவிளக்கு ஏற்றினர். புதிய அலுவலக கட்டடத்திற்கான இடம் ஒதுக்கீடு, நிதி ஆகியவை தமிழக ஆட்சிப் பொறுப்பில் அ.தி.மு.க., இருந்த போது மேற்கொண்டதால், அ.தி.மு.க.,வினர் தனியாக வந்து புதிய கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றினர்.
இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, ஜெயராமன், ஒன்றிய தலைவர் நர்மதா துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் அடுத்தடுத்து பங்கேற்றதால், ஒன்றிய அலுவலக வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.