/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேன் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
/
வேன் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
வேன் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
வேன் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2024 11:15 PM
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி அருகே வழித்தட ஆக்கிரமிப்பு மற்றும் வேன் ஸ்டாண்டை அகற்ற வேண்டும், என, பொதுமக்கள் சார்பில், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மக்களிடம், சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா மனுக்கள் பெற்றார்.
காட்டம்பட்டி புதுார் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே, காட்டம்பட்டியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். இங்குள்ள வண்டிப்பாதையை பல காலமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த பாதை, காட்டம்பட்டி - செஞ்சேரிமலை செல்லும் பிரதான ரோடாக உள்ளது.
மழை காலங்களில், மழைநீர் இந்தவழியாக சென்று காட்டம்பட்டியில் உள்ள குட்டையில் சங்கமிக்கிறது. தனி நபர்கள் சிலர் இரவோடு, இரவாக பெரிய கற்களை போட்டு அடைத்துள்ளனர்.
இதனால், மழைக்காலங்களில் எங்களது விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி எப்போதும் போல செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அகிலபாரத அனுமன் சேனா கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலையில், சேத்துமடை செல்லும் ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி கடந்த, 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் எதிர்புறம், ஆனைமலை பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆனைமலை பஸ் நிறுத்தத்தில் இருந்து சேத்துமடை, டாப்சிலிப், கோட்டூர், ஆழியாறு செல்லும் முக்கிய பிரதான ரோடாக உள்ளது.
ரோடு மிகவும் குறுகலாக உள்ளதாலும், அங்கு சட்டத்துக்கு புறம்பான வேன் ஸ்டாண்டால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே, வேன் நிறுத்தத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, வலியுறுத்தியுள்ளனர்.