/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓடைகள் துார்வாரும் பணி தீவிரம் : களமிறங்கிய நகராட்சி நிர்வாகம்
/
ஓடைகள் துார்வாரும் பணி தீவிரம் : களமிறங்கிய நகராட்சி நிர்வாகம்
ஓடைகள் துார்வாரும் பணி தீவிரம் : களமிறங்கிய நகராட்சி நிர்வாகம்
ஓடைகள் துார்வாரும் பணி தீவிரம் : களமிறங்கிய நகராட்சி நிர்வாகம்
ADDED : அக் 24, 2025 11:52 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடைகள் துார்வாரப்படுகின்றன.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, ஓடைகள் துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் குமரன், நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மழை காலம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளிடம், கலெக்டர் கேட்டறிந்தார்.
அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி நேருநகர், பெரியார் காலனி, கிழக்கு, மேற்கு, மணியகாரர் காலனி, பொட்டுமேடு, மரப்பேட்டை பள்ளம், சுடுகாட்டு பள்ளம், கல்லுக்குழி, குமரன்நகர், கண்ணப்பன்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் உள்ளன. இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
சின்னாம்பாளையம் ஊராட்சியில் இருந்து வரும் ஓடை, நகராட்சியின் பொட்டுமேடு வழியாக ஓடையில் இணைந்து, கண்ணப்பன் நகர் வழியாக வெளியேறுகிறது.இந்த ஓடைகளில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் துார்வாரப்பட்டு தற்போது மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பருவமழைக்காக ஓடைகளை துார்வாரும் போது, அதிகளவு பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகள் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
ஓடைகள் மற்றும் கால்வாய்களில் கழிவுகளை வீசுவதால் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கழிவுகளை கால்வாய்களில் வீசுவதை மக்கள் தவிர்த்து, துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.

